என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் பணம் மோசடி"
மதுரை:
உசிலம்பட்டி ஆனந்தா நகரைச் சேர்ந்த முனியாண்டி மனைவி நாகம்மாள் (வயது 48). துப்புரவு தொழிலாளி.
இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த விருமாண்டி (59) என்பவரிடம் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சம் கடன் கேட்டார். இதற்கு விருமாண்டி தயங்கினார்.
அப்போது நாகம்மாள் ஏ.டி.எம். கார்டை தருகிறேன். அதில் இருந்து மாதந்தோறும் வட்டிப்பணம் ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விருமாண்டி உசிலம்பட்டி பஸ் நிலையம் வந்து நாகம்மாளிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஏ.டி.எம். கார்டை வாங்கிச் சென்றார்.
சமீபத்தில் நாகம்மாள் ரூ. 1 லட்சம் அசலை திருப்பி கட்டிவிட்டு ஏ.டி.எம். கார்டை பெற்றார். அதன் பிறகு ஏ.டி.எம். கார்டில் பண இருப்பை சோதித்து பார்த்தபோது விருமாண்டி ரூ.1.32 லட்சம் பணத்தை கூடுதலாக எடுத்தது தெரிய வந்தது.
இது குறித்து நாகம்மாள் உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கல்யாண்குமார் வழக்குப்பதிவு செய்து விருமாண்டியை கைது செய்தார். இதில் தொடர்புடைய அவரது மருமகள் சுபா (35) தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.